இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்றை அரசாங்கத்துடன் ஆரம்பித்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் ஜனநாயகம் என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் இருந்து புத்திஜீவிகள் வெளியேறியுள்ளமையானது, சிக்கலான ஒரு விடயமாக அவதானிக்கப்படுகிறது.
அவர்கள் செயற்பாடுகளும், ஆலோசனைகளும் வடமாகாண அபிவிருத்திக்கு அவசியப்படுகின்றது.
இந்த நிலையில் வடக்கில் இருந்து புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் தங்கியுள்ள புத்திஜீவிகளை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் பல மக்கள் இன்னும் குடியேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும், தனியார் காணிகளை இராணுவத்தினர் பயன்படுத்துவதால், குடியேற்றத்திற்கும், சாதாரண வாழ்க்கை முறைக்கும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment