இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனித மனங்களை நெகிழ வைக்கின்றன. அந்தவகையில் கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலையால் நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, அப்படியே உறைந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 1902,1936 மற்றும் 1848 ஆம் ஆண்டுகளில் நயகரா நீர் வீழ்சி இவ்வாறு உறைந்து காணப்பட்டதாம்.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சி பகுதியளவி; உறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments[ 0 ]
Post a Comment