இந்தியர்கள் மூவர் கைது கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து
Sunday, January 12, 2014
சட்டவிரோதமான முறையில் சிகரட் தொகுதி ஒன்றை இலங்கைக்கு கொண்டு வரமுயற்சித்த இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவின் - கோலாலம்பூரர் நகரில் இருந்து அவர்கள் இந்த சிகரட் தொகையை எடுத்து வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பெறுமதியான 400 சிகரட் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதான மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
Tags:
sri lanka news
Comments[ 0 ]
Post a Comment