காலவதியான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரை விற்பனை செய்த வர்த்தகர்கள் கைது
Sunday, January 12, 2014
சிவனொளிபாத மலை பிரதேசத்தில் காலவதியான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரை விற்பனை செய்த 15 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பதிவு செய்யப்படாத நிலையில், போத்தலில் அடைக்கப்பட்ட நீரினை விற்பனை செய்த வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
Comments[ 0 ]
Post a Comment