மகாபலிபுரத்தில் பெங்களூரைச் சேர்ந்த மூன்று பேரை ராட்சத அலைகள் இழுத்துச் சென்றதில் மூவரும் கடலில் மூழ்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 8 மணி அளவில் அனைவரும் கடற்கரை கோவில் அருகே குளித்தனர். அப்போது 3 பெண்களை ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றது.
இதனை பார்த்து. அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் கூச்ச லிட்டனர். அங்கு நின்ற சங்கு வியாபாரிகளும், மீனவர்கள் சிலரும் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் 3 பேரும் கடலில் மூழ்கி விட்டனர்.
செய்வதறியாது பார்த்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து மாமல்ல புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் 3 பெண்களின் உடல்களும் அவர்கள் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் கரை ஒதுங்கியது.
பலியானவர்கள் பெங்களூர் ராஜாஜிநகர், நந்தினி லேஅவுட்டை சேர்ந்த ஹேமாவதி (வயது 32), கீதா (30), நாராயணபுரம் கஸ்தூரி (23) என்பது தெரிந்தது. அவர்களை உடன் வந்தவர்கள் அடையாளம் காட்டினர். இதில் ஹேமாவதி அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
3 பேரின்உடல்களையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பக்தர்கள் கடலில் குளித்த இடம் ஆழமான பகுதி ஆகும். அங்கு குளிக்க தடை விதித்து ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி எச்சரிக்கை போர்டு வைத்து உள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் குளித்தபோது 3 பெண்களும் மூழ்கி இறந்து விட்டனர்.
Comments[ 0 ]
Post a Comment