பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் தாயொருவர்  தனது இரு குழந்தைகளையும் கொலைசெய்து, தானும் தற்கொலை  கொண்டுள்ளமை தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு லண்டனின் ஹரோ பகுதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜீவரானி வாகீஸ்வரன், என்ற 32 வயதான குறித்த பெண் தனது 5 வயது மற்றும் 8 மாதங்களேயானா இரு ஆண்குழந்தைகளையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கணவர்  கடமையின் நிமித்தம் வெளியே சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு குழந்தைகளினதும் பிரேத பரிசோதனைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Comments[ 0 ]
Post a Comment