தங்காலை பிரதேச சபைத் தலைவரை கைதுசெய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம் இந்த பொலிஸ் குழு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
தங்காலையில் ஹோட்டல் ஒன்றினுள் பிரித்தானிய பிரஜையான குராம் ஷெய்க் கொலை செய்யப்பட்டமை மற்றும் அவரின் காதலியை குழுவாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரதேச சபைத் தலைவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றபோது தங்காலை பிரதேச சபைத் தலைவர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Comments[ 0 ]
Post a Comment