மட்டக்களப்பு வந்தாறுமூலை மருங்கையடி ஸ்ரீ சத்திவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர ஆலயத்தின் கதவு மற்றும் மடை அறையை திருடர்கள் நேற்றிரவு சேதப்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நேற்றிரவு உண்டியலில் பணம் இருக்காததால் திருடர்களின் முயற்சி பலனளிக்கவில்லை என ஆலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகளவில் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் நாள்தோறும் உண்டியலில் சேரும் பணத்தை அதிலிருந்து எடுத்து பாதுகாப்பாக வைக்கும் நடைமுறையை பின்பற்றி வருவதாக மருங்கையடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிருவாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்
Comments[ 0 ]
Post a Comment