கண்டி நகரிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையமொன்றுக்கு அருகே கைவிடப்பட்டிருந்த 3 சிறார்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்களும் 7 வயதான சிறுமியும் கைவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவர்களின் தாய் தற்போது வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
அவரை நாட்டுக்கு திருப்பியழைக்குமாறு கோரி சிறுவர்களின் தந்தை அவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் அருகில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறுவர்கள் பொலன்னறுவை கிரித்தலை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
Comments[ 0 ]
Post a Comment