எதிர்வரும் திங்கட்கிழமை புகைத்தலுக்கு எதிரான தினமாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய அன்றைய தினம், நாடளாவிய ரீதியாக புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதை வலியுறுத்தும் வகையில், சுகாதார விழிப்புணர்வு பாதயாத்திரை மற்றும் கல்வி செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சகல அதிகாரிகளுக்கும் சுற்று நிருபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைத்தல் பாவனையினால் ஏற்படும் நோய்கள் காரணமாக நாள் ஒன்றிற்று 60 பேர் வரை மரணிப்பதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Comments[ 0 ]
Post a Comment