ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் லயனல் மெஸ்சி (அர்ஜென்டினா),
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்),
பிராங்க் ரிபெரி (பிரான்ஸ்)
ஆகியோர் உள்ளனர். இதில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டின் சாம்பியன் லீக், பிரீமியர் லீக் ஆகியவற்றின் சாம்பியனான ரொனால்டோ, பல ஆண்டுகளாக முதலிடத்தை நோக்கி வருகிறார். ஐந்தாண்டுகளில் அவரது கோப்பை கனவு குறைந்திருந்தாலும், ஆட்டத்திறன் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரொனால்டோ ரியல்மாட்ரிட் கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக 59 ஆட்டங்களில் பங்கேற்று 69 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Comments[ 0 ]
Post a Comment