இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் தங்களின் அழகை பேணிக்காக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்களின் அழகை பாதுகாக்க நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று அதிக அளவு பணம் கொடுத்து தேவையற்ற பிரச்சனைகளை விலைக்கு வாங்குகிறார்கள்.
இந்த நிலையை போக்க அன்றாடம் சிறிது நேரம் நமக்கு சருமத்திற்காக செலவழித்தாலே போதுமானது
கூந்தல் அழகாக வளர தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டுமென அவசியமில்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து ஷாம்பூ போட்டு குளித்தால் போதும்.
சிகை அலங்காரம் மிக முக்கியம், காலத்திற்கேற்ப டிரெண்டியாக ஹார்ஸ்டைல் செய்தாலே போதும், இல்லையென்றால் சிம்பிளாக இருந்தாலும் உங்களுக்கு பொருத்தமான சிகை அலங்காரமே நன்றாக இருக்கும்.
சரும பாதுகாப்பிற்கு, தினமும் வெளியே சென்று வீடு திரும்பியதும், முகத்தை கழுவிவிட்டு, சிறிதளவு பஞ்சை பாலில் நினைத்து முகம், கழுத்து பகுதி ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்கை போக்கும்.
கண்களை சுற்றி கருவளையம் வராமல் இருக்க உருளைக்கிழங்கின் தோல்,எலுமிச்சை தோல் போன்றவற்றால் மசாஜ் செய்யலாம்
முகப்பருவை போக்க, முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம், ஒரு நல்ல பேஸ் வாஷை பயன்படுத்தி அன்றாடம் முகம் கழுவி, சந்தனம் தேய்த்து வந்தால் பரு குறையும்.
வெளியே செல்வதற்கு முன் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷன் தடவ வேண்டும்.இது சருமத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவிற்கு காக்கும்.
பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு அதில் வைத்து ரிலாக்ஸ் செய்யலாம். பாதங்களில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றை அகற்ற இது உதவும்.
Comments[ 0 ]
Post a Comment