விசாக் கட்டுப்பாடுகளை மீறியதாக, இந்தியப் பெண்கள் ஐந்து பேரை பொரள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்திருந்த பெண்கள் ஐந்து பேரும் பொரள்ளையில் அமைந்துள்ள கரோக்கி மதுபானசாலையில் வேலை செய்துள்ளனர்.
கைது செய்யப்படும்போது ஐவரும் நடனமாடிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபானசாலையின் மேலாளரும் கைது செய்யப்பட்டதுடன், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியப் பெண்கள் ஐவரும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Comments[ 0 ]
Post a Comment