தற்கொலை குண்டுதாரி ஒருவரிடமிருந்து தமது பாடசாலையை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த 15 வயது பாடசாலை மாணவர் ஒருவருக்கு விருது வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த திங்கட் கிழமை பாகிஸ்தான் இப்ரகாம் சாய் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த பாடசாலை மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்தது.
இதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை பாடாலை மாணவன் மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, தற்கொலை குண்டு தாரியும் பாடசாலை மாணவனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Comments[ 0 ]
Post a Comment