கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன், இலங்கை அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதாக, கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ராதிகா சிற்சபேஷன், இலங்கையில் தாம் அரசியல் ரீதியான அழுத்தங்களை சந்தித்தாக தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம், தாம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மறுத்துள்ளது.
சிற்சபேஷனுக்கு சுற்றுலா வீசாவே வழங்கப்பட்டிருந்தது.
இந்த வீசாவின் கீழ் இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் சிற்சபேஷன் இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இலங்கையில் அதிகாரிகள் தமது கடமையையே செய்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Comments[ 0 ]
Post a Comment