அமெரிக்காவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது கடும் பனி. வரலாறு காணாத அளவுக்கு என்று சொல்லும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவும் உறைந்து போய்க் கிடக்கிறது.
ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வீசிக் கொண்டுள்ள பலத்த பனிக் காற்று மேலும் பலமடைந்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த கடும் குளிர்இ பனிக்கு 21 பேர் தெற்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மத்திய மேற்கிலிருந்து கிழக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவை நோக்கி பலமாக வீசிக் கொண்டிருக்கிறது கடும் பனிக்காற்று. இதனால் வெப்ப நிலை மேலும் மேலும் கீழிறங்கியபடி உள்ளது.
பொஸ்டன் முதல் பிர்மிங்காம் வரை உறைந்து போய்க் கிடக்கிறது ஒட்டுமொத்த நாடும்.
இதுவரை இந்த கடும் குளிர்இ பனிக்கு 21 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
மத்திய மேற்கு மற்றும் கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் நிலவும் கடும் பனியைப் பார்த்தால் அன்டார்டிகாவை விட மோசமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் 50 மாகணாங்களிலுமே உறைநிலை அளவுக்கு வெப்ப நிலை உள்ளது.
ஹவாயில் மட்டுமே சற்று நிலைமை பரவாயில்லை என்று கூறப்பட்டது. தற்போது அங்கும் மைனஸ் 8 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இறங்கியுள்ளது.
சிகாகோவில் 3 ரயில்களில் பயணம் செய்த பயணிகள் திடீரென வீசிய பலத்த பனிக்காற்று மற்றும் ஐஸ் கட்டி மழையால் ரயில் அப்படியே நின்று விட.இ சுற்றிலும் பனிக் கட்டிகள் சூழ்ந்து கொள்ளஇ உள்ளே சிக்கித் தவித்தனர். பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உறைநிலையில் வெப்பநிலை இருப்பதால் எரிபொருளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரவ நிலையில் எதையுமே பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதால் எரிபொருளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது.
இதுவரை 21 பேர் இந்தக் குளிருக்கு இறந்துள்ளனர். அதிகபட்சமாக இல்லினாய்ஸில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்டியானாவில் 6 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Comments[ 0 ]
Post a Comment