பொதுபல சேனா அமைப்பினரின் கூட்டம் ஒன்று இன்று காலை 10 மணியளவில் மாவனல்லை நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு அங்குள்ள சிங்கள இன மக்களின் கடைகளில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் காலை வரவில்லை எனவும் சற்றுமுன் (2 மணி) எம்மை தொடர்புகொண்ட எமது நிருபர், பொதுபல சேனா அமைப்பின தற்போது மாவனல்லையை வந்தடைந்து கூட்டத்தை ஆரம்பித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை மாவனல்லை நகரம் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுதப்ப்துள்ளதை காணக்கூடியதாகஉள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாவனல்லை நகர மத்தியில் ஒரு கூட்டமொன்றை இன்று (10) நடத்தி விட்டு, ஞாயிற்றுகிழமை(12) மாவனல்லை நகரில் இருந்து தெவனகல பகுதிக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ஒரு சிறிய கூட்டத்திட்கு நகரைசுற்றி பொலிசார் புலனாய்வாளர்கள் பாதுக்காப்பில் இருந்தது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
Comments[ 0 ]
Post a Comment