இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட முத்திரை வெளியீட்டு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உழவர் திருநாளான தைப்பொங்கலினையும், உழவர்களின் பெருமையினையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த 05 ரூபா, மற்றும் 25 ரூபா பெறுமதியுடைய முத்திரைகளையும் கடிதவுறையினையும் பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று வெளியிட்டு வைத்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு தபால் மா அதிபர் ரோஹான அபேயரத்ன, வட மாகாண ஆளுநர் சந்திரஸ்ரீ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாந்கரசபை மேயர் யோகேஸ்வரி, பற்குணராசா, பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலட்சுமி, நல்லை ஆதீன முதல்வர் தபால் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments[ 0 ]
Post a Comment