கொழும்பின் தெஹிவளை, கொஹ_வல, கடுவல, கொலன்னாவ, அங்கொட, மொரட்வ மற்றும் கடுபெத்த ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் தொற்று அவதானம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாளைய தினம் குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன் எடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால் பரசிடமோல் தவிர்ந்த வேறு எந்தவித மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Comments[ 0 ]
Post a Comment