யாழ் மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் உள்ள புதிய நீதிமன்றங்கள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன.
மல்லாகம், சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆகிய இடங்களில் இவ்வாறு புதிய நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மல்லாகம் பகுதியில் உள்ள புதிய நீதிமன்ற கட்டம் இன்று காலை 11 மணியளவில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை சாவகச்சேரியிலும் மற்றுமொரு நீதிமன்ற கட்டடம் பிரதம நீதியரசரினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊர்காவற்றுரையிலும் புதிய நீதிமன்ற கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மேலும் பலர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
 
Comments[ 0 ]
Post a Comment