தென் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்குள் நுழைந்த பிக்குகள் குழு அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோரை தாக்கியது மட்டுமல்லாமல் ஓட ஓட விரட்டியும் உள்ளனர்.
ஹிக்கடுவை,பத்தேகம வீதியில் அமைந்துள்ள பிரார்த்தனை கூடம் உடைத்துக்கொண்டு தேரர்கள் குழு கூடத்திற்குள் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனிடையே பொலிசார் அங்கு வந்ததனைத் தொடர்ந்து பொலிசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிக்குகள் கும்பல் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலி வீதியில் ஹிக்கடுவ பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இரண்டு கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடங்கள் அங்கீகாரமில்லாமல் இயங்கி வருவதாகவும் அவை மூடப்படவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
Comments[ 0 ]
Post a Comment