எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். எழுதுமட்டுவாள் வரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் பூர்த்தியடைந்துள்ள இந்த ரயில் பாதையில் பரீட்சார்த்த ரயில் ஓட்டம் நடைபெறவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை புனரமைப்புப் பணிகளுக்கு சுமார் 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.
ஓமந்தை தொடக்கம் கிளிநொச்சி வரையான ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார் என்பது அனைவரும் அறிந்த விடயமே. ஆரம்பித்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்யப்பட்டுவந்த புனரமைப்புப் பணிகளைத்யடுத்து தற்போது எழுதுமட்டுவாள்வரை ரயில் பாதை நீண்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்தது.
Comments[ 0 ]
Post a Comment