வடமாகாண சபைக்கு புறம்பாக வடக்கில் அரச நியமனங்கள் வழங்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப் பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி வழி சம்பாஷனையின் போது அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
வடக்கு மாகாண சபை தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ் மக்களின் சிறிய அரசாங்கமாக காணப்படுகிறது.
இதனை மீறி, வடமாகாண முதலமைச்சரின் ஆலோசனை இன்றி, மாகாண சபைக்கு தெரியாமல் ஆளனரால் அரச நியமனங்கள் வழங்கப்பட்டால், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
 
Comments[ 0 ]
Post a Comment