தாம் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாகவும், சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தமது விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நாடுதிரும்பிய பின்னர் எமது செய்திப்பிரிவிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அதேநேரம் தமது இந்த விஜயம் தொடர்பில் தாம் எதிர்கட்சித் தலைவரிடம் இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாக வெளியான செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.
 
Comments[ 0 ]
Post a Comment