கிறித்தவ மற்றும் முஸ்லீம் ஆயுதக் குழுவினரிடையே நடந்து வரும் மோதல்களால் பதற்ற நிலை நிலவும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகர், பேங்குவியில், நடந்த கொடூரமான வன்செயல் ஒன்று தெரிய வந்திருக்கிறது.
"பைத்தியக்கார நாய்" ( மேட் டாக்) என்று உள்ளூரில் அறியப்படும் ஒருவன், கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்ட முஸ்லீம் ஒருவரின் சடலத்திலிருந்து, காலை வெட்டி எடுத்து அந்தக் காலிலிருந்த சதையை பச்சையாக சாப்பிட்டதாக, நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மனித உடலை மனிதர்களே உண்ணும் இந்த மோசமான செயலைச் செய்த இந்த நபர், பிபிசியிடம் பேசுகையில், தனது கர்ப்பிணி மனைவி, மைத்துனி மற்றும் மைத்துனியின் குழந்தை ஆகியோரைக் கொன்ற முஸ்லீம்களைப் பழிவாங்கவே தான் இப்படிச் செய்ததாகக் கூறினார்.
Comments[ 0 ]
Post a Comment