சீன கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த கப்பல்களில் ஒன்றும் சீனன்குடா அஷ்ரப்பு துறைமுகத்திலும் மறற்றையது வெளித்துறைமுகத்திலும் நங்கூரமிட்டுள்ளன.
Gin Chang Shang, Heng Suie ஆகிய சீன கப்பல்களே திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தபோது அங்கு ஏற்கனவே நங்குரமிடப்பட்டுள்ள லோஹோஸ் ஹோப் கப்பலில் சேவையாற்றும் தொண்டர்கள் சீன நாட்டு கொடிகளை அசைத்து குறித்த கப்பல்களை வரவேறறனர்.
இதன்போது கடற் படையின் கிழக்கு பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் அமரசிங்கவும் கலந்துகொண்டார். இந்த கப்பல்கள் மூன்று தினங்களுக்கு திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments[ 0 ]
Post a Comment