எதிர் வரும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் கோரிய போதும் அதனை அரசாங்கம் தருவதாக இல்லை.
கடுவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களுடன் வீதிக்கு இறங்க வேண்டிய காலம் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அவ்வாறு வீதியில் இறங்கினாலேயே மக்களுக்கு தீர்வுதர அரசாங்கம் முற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment