சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட, சுமார் 9 ஆயிரம் கருத்தடை ஊசி மருந்துகள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றின் சந்தை பெறுமதி 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இலங்கை வந்த 42 வயதான ஒருவரே இவற்றை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் போது இவைகள் யாழ்ப்பாண தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment