பொங்கலை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது ஜில்லா. தமிழகத்தில் 400 அரங்குகளில் வெளியாகிறது. 
கேரளாவில் மோகன்லாலே வெளியிடுகிறார் இந்தப் படத்தை. அங்கு மொத்தம் 300 அரங்குகளில் ஜில்லா வெளியாகிறது. 
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ஜில்லா வெளியாகிறது. விஜய் படங்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. 
எனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படம் வெளியாகிறது. மொத்தம் 1200 அரங்குகளில் படம் வெளியாவதாக நேற்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி அறிவித்துள்ளார்.
தடை கோரிய  வழக்கு ஒத்திவைக்கப் படலாம் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தடை செய்தால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடத்தப் போவதாக விஜய் ரசிகர் மன்றங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
Comments[ 0 ]
Post a Comment