சோமாலியாவில் வட்டிக்கு நிதியினை வழங்கும் நிறுவனங்களை தடைசெய்யுமாறு இஸ்லாமிய போராளிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இப்படியான நிறுவனங்கள் 15 நாள் கால அவகாசத்தினுள் தமது நிறுவன வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும் அல்கைடா போராளிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ள அல் ஷபா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவிற்கு ஏற்பட செயற்படத் தவறும் நிறுவனங்கள், எதிரிகளுடன் இணைந்து செயற்படுபவர்களாக கணிக்கப்பட்டு இஸ்லாமிய சட்டத்திற்கு அமைய கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டு பலருக்கு கடுமையான தண்டனையினை இந்த இஸ்லாமிய போராளிக் குழு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
Comments[ 0 ]
Post a Comment