தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இயங்கும், உள்ளுராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்களை தோற்கடிக்கும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதன் கீழ் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள், கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின செயலாளர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டமைக்குப் பின்னரே, இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment