முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டிய மீலாதுன்நபி விழாக்கள் நாளை 14 ஆம் திகதி நாடு முழுவதும் கொண்டாடப்படும்.
இதனை ஒட்டி மெளலிது மஜ்லிஸுகளும், அன்னதானம், மீலாத் சொற்பொழிவு, ஹதீஸ் மஜ்லிஸுகளும் ஏற்பாடாகியுள்ளன.
தேசிய மீலாத் விழா 16ஆம் திகதி பேருவளை நகரில் கொண்டாடப்படும் .பிரதமர் டி. எம். ஜயரத்ன தலைமையில் நடைபெறும். இவ்விழாவில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மதப்பிரமுகர்கள் பங்கு கொள்வர்.
விழாவை ஒட்டி களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.
மீலாத் விழாவை ஒட்டி பேருவளை பிரதேசத்திலுள்ள மஸ்ஜித்கள், மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்ய 13 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீலாத் தினத்தை முன்னிட்டு வானொலியிலும் தொலைகாட்சியிலும் விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.
Comments[ 0 ]
Post a Comment