யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதயபெரேரா நேற்று (12) தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்.
கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் பலாலி உள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையத்தில் தனது பொறுப்புக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இராணுவத்தலைமையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதையடுத்து இவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த மல்லாகம் கோணப்புலம் நலம்புரி நிலையத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த மேஜர் ஜெனரல், 100 பாடசாலை மாணவர்களுக்கு 500 ரூபா வைப்பிலிப்பட்ட வைப்புப் புத்தகங்களை வழங்கினார்.
ராணுவத்திற்கு தலைமை தாங்குபவர் மாணவர்களுக்கு ஏன் காசு கொடுத்தார்?இதன் பின்னணி என்ன?
Comments[ 0 ]
Post a Comment