மேல் மாகாண சபையை கலைப்பதற்கான தினத்தை தீர்மானிப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மேல் மற்றும் தென் மாகாண சபைகள் இந்த மாதம் கலைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தநிலையில், பின்னர் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு மாகாண சபைகளும் நாளைய தினம் கலைக்கப்படலாம் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments[ 0 ]
Post a Comment