மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரிமேக்கை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். மோகன்லால் நடித்த ஜார்ஜ் குட்டி வேடத்தில் நடிப்பவர் வெங்கடேஷ்.
ஜிது தாமஸின் த்ரிஷ்யம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதன் தமிழ் ரிமேக்கில் நடிக்க விக்ரம் விருப்பம் தெரிவித்தது நினைவிருக்கலாம். த்ரிஷ்யத்தின் தமிழ், தெலுங்கு ரிமேக் உரிமையை வாங்கியவர் சுரேஷ் பாலாஜி. பழம்பெரும் தமிழ் தயாரிப்பாளர் பாலாஜியின் மகன், மோகன்லாலின் மச்சான். இவரின் சகோதரியைதான் மோகன்லால் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கில் த்ரிஷ்யம் ரிமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். 22 பீமேல் கோட்டயம் படத்தை மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் தமிழில் ரிமேக் செய்து வரும் முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியா த்ரிஷ்யம் தெலுங்கு ரிமேக்கையும் இயக்குகிறார். இவரது கணவர் ராஜ்குமார் சேதுபதியின் ராஜ்குமார் தியேட்டர்ஸ், வெங்கடேஷின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இரண்டும் இணைந்து இந்த ரிமேக்கை தயாரிக்கின்றன.
சரியான நடிகர் அமைந்ததும் தமிழ் ரிமேக்கையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் ஜரேஷ் பாலாஜி.
 
Comments[ 0 ]
Post a Comment