கனடாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் 
Saturday, January 11, 2014
கனடாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அழைப்பின் பேரில் அவரது விஜயம் அமையவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் இலங்கை தங்கி இருந்து மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் ஆய்வார் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேஷன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Tags:
sri lanka news
 
Comments[ 0 ]
Post a Comment