எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த  பாடசாலையொன்றில் ஈட்டி எரிதல் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவனின் முகத்தில் ஆறு அங்குலத்திற்கு ஈட்டி புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
எம்பிலிப்பிட்டிய, பனாமுற வித்தியாலயத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் பிரிதொரு மாணவன் வீசிய ஈட்டி கயான் மதுசங்க என்ற மாணவ தலைவனின்  முகத்தில் இடது பக்க கண்ணுக்கருகில் பட்டு  உற்புகுந்துள்ளது.
உடனடியாக முகத்தில் உள்ள ஈட்டியுடன் மாணவனை எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச்சென்ற வேளையில் அங்குள்ள வைத்தியர்கள் ஈட்டியின் ஒரு பகுதியை மெதுவாக வெட்டி அகற்றியுள்ளனர்.  உட்புகுந்த ,மிகுதி பகுதியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குறித்த மாணவனை அனுப்பிவைத்துள்ளனர்.
 
Comments[ 0 ]
Post a Comment