பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந், நடிகை ஜூலி காயெயுடன்உறவு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள பாரிஸிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் குறித்த சஞ்சிகை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை தொடர்பில் அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எலீஸி பேளஸுக்கு அருகே உள்ள ஃபிளாட் வீடொன்றில் அதிபர்ஒல்லாந் நடிகை காயெயுடன் தொடர்ந்தும் இரவுப்பொழுதைக் கழித்துவருவதாக பரவிவந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாகக்ளோஸர்- சஞ்சிகை பல படங்களை வெளியிட்டுள்ளது.
சாரதி ஒருவர் ஸ்கூட்டர் ஒன்றை ஓட்டிவர, கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் அதிலிருப்பதைக் காட்டும் படங்களை அந்த சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
இருவருக்கு இடையிலான காதல் சந்திப்பின்போது, ஒரேயொரு பாதுகாவலரே அவர்களுடன் இருப்பதால் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களும் உள்ளதாக க்ளோஸர்- சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகவியலாளரான வலெரி த்ரெய்வெலயர்ஹ் தான் அதிபரின் சட்டபூர்வ வாழ்க்கைத் துணையாவார்.
அதற்கு முன்னர், சக சோசலிஸ்ட் அரசியல்வாதியான செகோலேனே ர்ஓயாலுடன் அவர் நீண்டகால உறவினை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Comments[ 0 ]
Post a Comment