தனியார் போக்குவரத்து பஸ்கள் தொடர்பாக அமைச்சின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வரும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தனியார் போக்குவரத்த சேவைகள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்தார். 
தனியார் போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான ஸ்கைப் விலாசம் மற்றும் தொலைப்பேசி இலக்கம் ஆகியவற்றை அமைச்சு கடந்த முதலாம் திகதி அறிமுகப்படுத்தியது. 
அப்பிரிவுக்கு இதுவரையில் 34 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் தூர பிரயாண பஸ் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் குறுகிய தூர பஸ் தொடர்பாக 32 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்றும் அதில் தூரப் பிரயாண பஸ் தொடர்பான முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஜயமான்ன மேலும் தெரிவித்தார். 
தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பயணிகளின் முறைப்பாடுகளில் பல குறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அதனால் விசாரணையின் போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜயமான்ன முறைப்பாடுகள் செய்யும்போது பஸ்ஸின் பதிவு இலக்கம்- வீதி இலக்கம்- நேரம் என்பவற்றை தெளிவாக குறிப்பிடவேண்டும் என்று வலியுறுத்தினார். 
தொலைபேசி இலக்கம்- 071655 0000
ஸ்கைப் - privatetransportservices
மின்னஞ்சல் - 
mprivatetransport@gmail.comஇணையதள முகவரி - ptsmin.gov.lk
 
Comments[ 0 ]
Post a Comment