யாழில் நீதிமன்ற திறப்பு விழா சிறப்பாக நடைபெற்ற போதும் அங்கு நமது முதலமைச்சரை காணவில்லை, சுற்றி சுற்றி தேடினோம் அவர் இல்லை,
வடமாகாண சபைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அங்கிருந்தவரால்  தான் இந்த செய்தி வெளி வந்தது. வடமாகாண முதலமைச்சருக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு அனுப்பவில்லை.
இது தமிழர்களை வைத்து தமிழர்களின் கண்ணை குத்தும் திட்டம் , இதற்கு யாழ் அரச அதிபர் உட்பட பலர் அரசுடன் சேர்ந்து இப்படியான வேலைகளை செய்து வருகின்றனர்.
இன்று பல தமிழ் ஊடகங்கள் மல்லாகம் நீதிமன்ற புகைப்படங்களை வெளியிட்டனரே தவிர எமக்கு நடக்கும் அவமானங்களை பொருட்படுத்துவதில்லை.
எமது ஊடக நண்பர்கள் கூட இப்படியான சம்பவங்களை வெளியில் கொண்டுவருவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அதியன்
 
Comments[ 0 ]
Post a Comment