மலேயரியாவை முற்றாக ஒழிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மலேரியா தடுப்புப்பிரிவுடன் இணைந்து சர்வோதயம் அமைப்பினால் மலேரியா விழிப்புணர்வுக் கருத்துப்பகிர்வும் நுளம்பு வலைகள் வழங்குதலும் நடைபெற்றன.
மட்டக்களப்பு வலையறவு மெதடித்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் பொதுச் சுகாதாரப்பரிசோதகர் வ.ரமேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பிராந்தியத்துக்கான மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி மேகலா ரவிச்சந்திரன்,  சர்வோதயத்தின் கிழக்குப்பிராந்திய இணைப்பாளர் ,.எல்.ஏ.கரீம், உள்ளிட்டோரும், கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பின் வலையறவு பிரதேசத்திலுள்ள 900 வரையானோருக்கு இந்த நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தல் மலேரியாவைத் தடுக்கும் நோக்கில் சுகாதாரத்திணைக்களத்தின் பணிப்பின் பேரில் சர்வோதயத்துடன் இணைந்து மலேரியா தடுப்புப்பிரிவினரால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 மாவட்டத்தின் மலேரியா தொற்று ஏற்படலாம் என அடையாளங்காணப்பட்ட பிரதேசங்களில் விழிப்புணர்வுச் செயற்திட்டங்களும்இ நுளம்பு வலை வழங்கலும் நடைபெற்று வருகின்றது.
இதன்படி இதுவரையில் தாந்தாமலை, கச்சைக்கொடிசுவாமிமலை, ஏறாவூர், போரதீவு, மாவிலங்குதுறை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சுமார் 6000 நுளம்பு வலைகள் வழங்கப்படவுள்ளன. 
 
Comments[ 0 ]
Post a Comment